Showing posts with label சுற்றுலா தளங்கள். Show all posts
Showing posts with label சுற்றுலா தளங்கள். Show all posts

Wednesday, November 20, 2013

கேரள மாநிலம், கண்ணணூர்


அழகிய அரபிக் கடற்கரையோரத்தில் 150 ஆண்டுகளுக்கு முன் கட்டப்
altபட்டு இன்று வரை நமது நாட்டின் தொல்லியல் துறையால் மிகச் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வரும் ஒரு சுற்றுலாத் தலத்தை கேரளத்தில் கண்டோம்.

கேரள மாநிலம், கண்ணணூர் நகரில் இருந்து சற்றேறக்குறைய 5 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது செயின்ட் ஆஞ்சலோ கோட்டை.

இந்தியாவின் மேற்குக் கரையில் இறங்கி தங்கள் ஆதிக்கத்தை

தேக்கடி


altதமிழ்நாடு, கேரள மாநில எல்லைப் பகுதியில் கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள குமுளி எனும் ஊரிலிருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள சுற்றுலாத் தலம் தேக்கடி. இந்தப் பகுதி பசுமைமாறாக் காடுகளுக்காகவும், சவான்னாப் புல்வெளிகளுக்காகவும் புகழ் பெற்றது. இது கடல் மட்டத்திலிருந்து 1800 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. 673 சதுர கி.மீ. பரப்பளவிலான பெரியாறு தேசியப் பூங்கா எனும் பெரியாறு புலிகள் சரணாலயப் பகுதியில் யானை, புலி, சோலை மந்தி, காட்டு எருமை, மான் போன்ற உயிரினங்கள் அதிகமாக இருக்கின்றன. இங்குள்ள ஏரிப் பகுதியில் படகில் பயணம் செய்தபடியே,

மூணார்-கேரளா

altமூணார்  தமிழகத்தின் அருகிலுள்ள கேரளத்தின் தெற்கத்திய மாவட்டமான இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஒரு அழகிய நகரம். தேயிலை தயாரித்தலே இங்கு முக்கியமான தொழில் ஆகும். முத்தரப்புழா, நல்லதண்ணி, குண்டலா ஆகிய 3 ஆறுகள் சங்கமிக்கும் இடமாததால் மூன்றாறு என்றிருந்து மூணாறாகியுள்ளது. சுற்றுலாத்தலத்தில் உலக மக்களைக் கவரும் தேயிலைத் தோட்டங்களும் இயற்கை எழில் கொஞ்சும் கண்கவர் முகில்களும், வளைந்து நெளிந்து செல்லும் பாதைகளும் கண் கொள்ளாக் காட்சி. ஊட்டி, கொடைக்கானலிற்குப் பிறகு தீபகற்ப இந்தியாவில் உள்ள மூன்றாவது

தனுஷ்கோடி


altகட‌ற்கோ‌ள் ம‌ற்று‌ம் கடுமையான புயலினாலு‌ம் அழிந்து த‌ற்போது வெறு‌ம் நினைவு சின்னமாய் காட்சியளிக்கும் தனுஷ்கோடியின் சிதைந்த கட்டிடங்களில் இருந்து ச‌ட்ட‌விரோதமாக ‌சில‌ர் அபூர்வ கற்களை பெயர்த்து எடு‌த்து சு‌ற்றுலா‌ப் பய‌ணிக‌ளிட‌ம் ‌வி‌ற்று வரு‌கி‌ன்றன‌ர்.

ராமேசுவரத்தில் இருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது தனுஷ்கோடி கடல்பகுதி. 1964-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை தனுஷ்கோடி பகுதி ராமேசுவரத்திற்கு அடுத்த படியாக

திருப்பூர் மாவட்டம்


altதிருப்பூர் மாவட்டத்தில் உடுமலை அருகேயுள்ள அமராவதி, திருமூர்த்தி அணைகள், சின்னாறு என மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகள் கோடை சுற்றுலாவுக்கு ஏற்றவை.

திருமூர்த்தி மலை
உடுமலையில் இருந்து 21 கி.மீ. தொலைவில் உள்ளது. திருமூர்த்தி மலையடிவாரத்தில் அமணலிங்கேஸ்வரர் கோயிலும், அணையும் இருக்கிறது. அணையில் படகு சவாரி செய்யலாம். அணையின் கரையில் வண்ண மீன் காட்சியகம் உள்ளது. அரிய வகை

ஈரோடு மாவட்டம்



altபண்ணாரி அம்மன் கோயில்
தமிழகத்தில் மிகப் புகழ்பெற்ற அம்மன் கோயில்களில் இதுவும் ஒன்று. இங்கு அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்கு விபூதி கிடையாது. புற்று மண்தான் விபூதி பிரசாதமாக தரப்படுகிறது. தெற்கு நோக்கி இருக்கும் அம்மன் கோயில் இது. இக்கோயிலில் குடிகொண்டுள்ள மாரியம்மன் மிகச் சக்தி வாய்ந்த தேவதையாக இப்பகுதி மக்கள் கருதி வழிபடுகிறார்கள். பவானி சாகரிலிருந்து

கோயம்புத்தூர்

altகோவை குற்றாலம்:

மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் நீர் அனைத்தும் ஒன்று சேர்ந்து சிறுவாணி மலை அடிவாரத்தில் அருவியாக கொட்டுகிறது. பச்சை பசேல் என்ற மரங்களின் நடுவே குளிர்ந்த நீராக கொட்டும் இதை கோவை குற்றாலம் என அழைக்கின்றனர். இந்த இடம் கோவை நகரில் இருந்து 24 கி.மீ., தூரத்தில் உள்ளது.
 

வைதேகி நீர்வீழ்ச்சி:
கோவை குற்றாலம் போன்றே இதுவும் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. காஞ்சிமாநதி என அழைக்கப்பட்ட இந்த இடத்தில்

சென்னை


altசென்னையில் உள்ள உயரமான மற்றும் பெரிய பூங்கா கோபுரம். அண்ணாநகர் பூங்காவில் அமைந்துள்ள இந்த கோபுரம் வட்ட வடிவில் சுற்றி சுற்றிச் செல்லும் படிக்கட்டுகளைக் கொண்டுள்ளது. இதன் உச்சியில் இருந்து சென்னையை முழுமையாக கண்டு ரசிக்க முடியும். அண்ணாநகர் ரவுன்டானா அருகே அமைந்துள்ள இதற்கு நுழைவு கட்டணம் ரூ.1; காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை வாரத்தில் 7 நாட்களும் இது

வேலூர்



ஸ்ரீபுரம் மகாலட்சுமி கோயில் முக்கிய கோபுரம் தங்கத்தால் வேயப்பட்டுள்ளது. ஸ்ரீநாராயணி பீடத்தினால் இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது. நட்சத்திர வடிவில் அமைக்கப்பட்டுள்ள கோயில் முழுவதும் தங்க நிறத்தில் ஜொலிக்கிறது. திருப்பதி திருமலை தேவஸ்தானத்திலிருந்து வரவழைக்கப்பட்ட கொல்லர்கள் மூலம் கோயிலின் மைய கோபுரம் தங்கத்தால் செய்யப்பட்டுள்ளது. ஆறு வருடங்களில், 600 கோடி ரூபாய் செலவில், 55 ஆயிரம் சதுர அடியில் கோயில் கட்டப்பட்டுள்ளது. கோயிலின் மொத்த பரப்பளவு 100 ஏக்கராகும். வேலூரில் இருந்து 6 கி.மீ தொலைவில் கோயில்

ஊட்டி


நீலகிரி :
சர்வதேச சுற்றுலா பயணிகள் குவியும் இடங்களில் நீலகிரி மாவட்டமும் ஒன்று. இயற்கை எழில் கொஞ்சும் மலைகள், பச்சை கம்பளம் விரித்த புல்வெளிகள், வனங்கள், தேயிலை தோட்டங்கள், அருவிகள், அணைகள் என எக்கசக்க இடங்கள் உள்ளன.

ஊட்டி
alt

ஊட்டியில் அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், மரவியல் பூங்கா, தொட்டபெட்டா, பைக்காரா அணை ஆகியவை பார்க்க வேண்டிய இடங்கள். இவற்றை பார்க்க சர்க்யூட் பஸ் இயக்கப்படுகிறது. பெரியவர்களுக்கு ரூ.60, சிறியவர்களுக்கு ரூ.30 கட்டணம். வாடகை வாகனங்களும் உள்ளன. சாதாரண நாட்களில் ரூ.800, சீசனில் ரூ.1300 வரை வசூலிக்கிறார்கள். நூற்றாண்டு பழமை வாய்ந்த தாவரவியல் பூங்காவில் அரிய வகை

தேனி


altபாலசுப்ரமணிய கோயில்
பெரியகுளத்தில் உள்ள கோயில்களில் பாலசுப்ரமணியம் கோயில் மிக முக்கியமானதாகும். இந்த கோயில் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டாகும். இங்குள்ள முருகன் சிலை ஆறு முகங்களை கொண்டதாகும். மேலும் இந்த சிலை மண்ணை தோண்டுபோது கண்டுபிடிக்கப்பட்தாகும்.
போடி மெட்டு
கடல் மட்டத்தில் இருந்து 4,500 அடி உயரத்தில் உள்ள மலை வாசஸ்தலமாகும். போடிநாயக்கனூரில்

கன்னியாகுமரி

இந்தியாவின் தென்கோடி முனை. தமிழகத்திற்கு தெற்கு எல்லையாகத் திகழும் நகரம். வடவேங்கடம் முதல் தென்குமரி ஆயிடை தமிழ்கூறும் நல்லுலகம். ஆதித தமிழகத்தின் ஆவண நகரம். அரபிக்கடல், வங்காளவிரிகுடா, இந்தியப் பெருங்கடல் என முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி, சுற்றுலாத் தலங்களில் கவனத்திற்குரியது. இங்கு காணக் கிடைக்கும் சூரிய உதயமும், அஸ்தமனமும் வண்ணத்திருவிழா. வானம் வாரியிறைக்கும் வர்ண ஜாலம் அது. பல வண்ண மணல் நிரம்பிய குமரி கடற்கரை காணக் காண இன்பமே.

சிதரால்
மலைமீது அமைந்துள்ள திருக்கோயில். சமணமத தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் நிறைந்த அழகுக் கோயில். இந்தியத் தொல்பொருள் ஆய்வுத் துறையால் பராமரிக்கப்படும் இக்கோயிலை தரிசிக்க கன்னியாகுமரியிலிருந்து 45 கி.மீ. செல்ல வேண்டும்.

காந்தி நினைவாலயம்
மகாத்மா காந்தியடிகளின் அஸ்தி பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள நினைவாலயம். முக்கடல் சங்கமத்தில் மூழ்கி நீராடுவதற்கு முன் தேசத் தந்தைக்கு இறுதி மரியாதை செல்லுத்துவதற்கு வசதியாக இது அமைக்கப்பட்டுள்ளது. மகாத்மா பிறந்த அக்டோபர் 2 ஆம் நாள் மட்டும் ஒரு

கடலூர்

கிழக்குக் கடற்கரை சாலையின் உச்சியில் வருகிறது கடலூர். முக்கிய வரலாற்று நினைவிடங்கள், சிறப்புமிக்க கட்டடங்கள், பழமையான கோயில்கள் என்று பல பெருமைகள் இம்மாவட்டத்திற்கு உரியது. புகழ்மிகு தில்லை நடராசர் கோயில், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கம், போர்த்துக்கீசியர்கள் வாணிபம் நடத்திய பரங்கிப்பேட்டை, சமரச சன்மார்க்க நெறி கண்ட வள்ளலார் பிறந்த வடலூர் என பல சிறப்புகள் உண்டு.

சிதம்பரம்
சிதம்பர ரகசியம் தெரியாதவர்கள் உண்டா! சிதம்பரம் நடராசர் நாட்டியக் கலையின் கடவுள். இந்த பிரமாண்டக் கோயிலில் உள்ள நடனச் சிலைகள் ஒயிலும் எழிலுமாய் அழகுற அமைந்துள்ளன. தென்னாடுடைய சிவனின் ஐந்து சபைகளில் ஒன்றான பொற்சபையும் இதுதான். இந்த அடைமொழிக்குப் பொருத்தமாக நடராசர் ஆலயத்தின் மேற்கூரையை பொன்னால் வேய்ந்து பொலிவூட்டினான் பராந்தகச் சோழன். தொலைபேசி - 04144 222696

காட்டு மன்னார்குடி
சிதம்பரம் வட்டத்திலுள்ள சிறு நகரம். இங்குள்ள பெருமாள் கோயில் மிகப் பழமையானது. வைணவத் துறவிகளான நாதமுனிகள், ஆளவந்தார் ஆகியோர் பிறந்த இடம். இதுவே

காஞ்சிபுரம்

காஞ்சிக்குத் சென்றால் காலாட்டிக் கொண்டே சாப்பிடலாம் என்பார்கள் பாரம்பரிய பட்டு நெசவுக்குப் பெயர் பெற்ற பட்டுத் தொழிலின் தலைநகரம். இந்தியாவின் ஏழு புனிதத் தலங்களில் ஒன்று. பல்லவர்களின் தலைநகர் என்ற பெருமைக்குரியது. சோழ விஜயநகர முகலாயப் பேரரசர்கள் ஆண்ட பூமி. அறிஞர் அண்ணா பிறந்த ஊர். மதங்களின் கோயில்கள் கொண்ட நகரம். தமிழ்ப் பண்பாட்டையும் வரலாற்றையும் மொழியையும் கற்பிக்கும் தமிழ்க் கல்லூரி இங்குண்டு. சென்னை வரை நீள்கிறது இம்மாவட்டம்.

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா - வண்டலூர்
குழந்தைகளின் மனவுலகில் சஞ்சரிக்கும் விலங்கினங்களை நேரில் பார்க்கும் வாய்ப்புள்ள பூங்கா. விலங்குகள் சுதந்திரமாய் நடமாடும் பிரமாண்ட அகழியை தூரத்திலிருந்து பார்க்கும் வசதி இங்குண்டு. சிங்கங்கள் நடமாடும் பகுதிக்குள் லயன் சஃபாரி என்ற பாதுகாக்கப்பட்ட சிற்றுந்துப் பயணம் இப்பூங்காவின் முக்கிய அம்சம். இங்கு சைக்கிளில் சுற்றிப் பார்க்கும் வசதியும் செய்யப்பட்டிருக்கிறது. பாட்டரியில் இயங்கும் குட்டி புகைவண்டியில் அமர்ந்தபடி பூங்காவின் மொத்தப் பரப்பையும் கண்டு ரசிக்கலாம். கடல் உயிரினங்கள், தொல் விலங்குகள் பிரிவு, பறவைப் பண்ணை மற்றும் ஊர்வனப் பண்ணை என பல பிரிவுகள் உண்டு. இது சென்னையிலிருந்து

மதுரை

தமிழின் மதுரத்தை பெயரிலேயே கொண்ட ஊர். சங்ககாலச் சுவடுகளின் அழியாத வரலாற்று சாட்சியாக எஞ்சி நிற்கும் தொன்மத்தின் தொடர்ச்சி தமிழ் நிலம் மற்றும் பண்பாட்டு பரப்பின் இதயம் என்று மதுரையைச் சொல்லலாம். மதுரையம்பதி, கூடல் நகர், கடம்பவனம் என்று தமிழ் இலக்கியங்களில் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் மதுரை நகரும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் தமிழர்களின் பண்டைய வாழ்க்கை முறை, கலை அறிவு, நாகரிக மேன்மை இவற்றின் அழிக்க முடியாத அடையாளங்களாக நிமிர்ந்து நிற்கின்றன.
சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த சான்றோர்கள் வாழ்ந்த இடம். மதுரையின் மையத்திலிருக்கும் மீனாட்சி அம்மன் திருக்கோயிலின் கம்பீரமான கோபுரங்களும் அதைச் சுற்றிச் சுற்றி பிரகாகரமாகவே விரியும் மாடவீதி மாசி வீதி சித்திரை வீதிகளும் கட்டுமான கலை நுட்பத்தில் தழிழர்கள் எவ்வளவு சிறந்து விளங்கினார்கள் என்பதற்கு காலத்தின் சாட்சியாய் இன்றும் நிலைத்திருக்கும் எழில்நகர். தழிழர்களின் வீரம் எத்தகையது

தஞ்சாவூர்

தமிழகத்தின் நெற்களஞ்சியம். பிற்காலச் சோழர்களின் காலமான கி.பி. 11 மற்றும் 14 ஆம் நூற்றாண்டுகளின் புகழ்பெற்ற மாநகரமாகத் திகழ்ந்தது. கலைக்கும், இலக்கியத்துக்கும், கைவினைப் பொருட்கள் செய்வதற்கும் புகழ்பெற்ற தமிழ்த் தரணி. முற்கால, பிற்கால தமிழ் இலக்கியத்தின் மாபெரும் படைப்பாளிகளை ஈன்றெடுத்த மண். கர்நாடக இசைத் தந்தையான தியாகையர் வாழ்ந்த திருவையாறு இந்த மாவட்டத்தில்தான் இருக்கிறது. காவிரி தவழும் கவின்மிகு பூமி.

தஞ்சை பெரிய கோயில்
ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் அழகின் கம்பீர சாட்சியாக நிற்கும் மிகப்பெரிய கோயில். மாமன்னன் இராஜராஜ சோழனால் கட்டப்பட்ட திருக்கோயில். இந்தியாவின் சிற்பக் கலைக்கு தஞ்சைப் பெரிய கோயில்தான் முகவரி. இருபக்கமும் அகழிகள் சூழ, இன்னொரு பக்கம் ஆறும் அணைக்கட்டும் அரணாக நிற்கின்றன. பிரகதீஸ்வரர் கோயில் கொண்டுள்ள இந்த ஆலயத்தின் கருவறையில் இருந்தே இதன் விமானம் எழுந்து நிற்பது இதன் தனிச் சிறப்பு. விமானத்தின் உயரம் 216 அடிகள். இதன் மேலுள்ள கலசம் வெண்கலத்தால் செய்யப்பட்டது. இதன் நிழல் தரையில் விழாதது இன்னொரு சிறப்பு. கருவறைக்கு எதிரில் 12 அடி உயரம், 19 அடி நீளம், 8 அடி அகலத்தில் மிகப்பெரிய நந்தி இருக்கிறது. உட்புறச் சுவர்களில சோழர் மற்றும்

தூத்துக்குடி

தூத்துக்குடி என்றாலே முத்துக் குளிப்பது நினைவுக்கு வந்துவிடும். இங்கு பாரம்பரியமான தொழில் உப்பு தயாரிப்பது. இது ஒரு துறைமுக நகரமாகும். சரக்குப் பேட்டகங்களை கையாள்வதில் நாட்டின் இரண்டாவது பெரிய துறைமுகம் இதுதான். தற்போது ஸ்பிக், ரசாயனத் தொழிற்சாலை மற்றும் அணு ஆற்றல் தயாரிக்க உதவும் கனநீர் தொழிற்சாலை, மின் ஆலை போன்றவையும் உள்ளன.

பாரதியார் மணி மண்டபம்
மகாகவி பாரதியின் சொந்த ஊரான எட்டயபுரத்தில் இந்த மணி மண்டபம் அமைந்துள்ளது. 1945 ஆம் ஆண்டு பிரபல எழுத்தாளர் கல்கியால் கட்டப்பட்டது. அப்போது அதற்கு மகாத்மாகாந்தி வாழ்த்து தெரிவித்தார். 1981இல் பாரதியின் நூற்றாண்டு விழாவின்போது தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை இந்த நினைவிடத்தைத் தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டது.

எட்டையபுரம்
தூத்துக்குடியிலிருந்து 34 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள

திருநெல்வேலி

தாமிரபரணியின் தாலாட்டில் உயிர்த்திருக்கும் அழகிய நதிக்கரை நகரம். திருநெல்வேலி ஸ்தல வரலாற்றுப்படி இறைவனுக்கு அமுது படைக்க நெல்லையப்பர் சந்நிதியில் நெல்லை உலர்த்தும்போது பெய்த மழையானது நெல் நனையாமல் வேலி போல் தடுத்ததால் திருநெல்வேலி என பெயர் பெற்றது. பிற்கால பாண்டிய மன்னர்களின் தலைநகராகவும் இது விளங்கியுள்ளது. தமிழகத்தில் நாயக்கர்களின் ஆட்சியை நிறுவிய விஸ்வநாத நாயக்கர் 1560 ஆம் ஆண்டு இந்நகரை மறுநிர்மாணம் செய்துள்ளார்.

அம்பாசமுத்திரம்
கோயில்கள் நிறைந்த ஊர். காசி விஸ்வநாதர் கோயில், திருமூநாந்தசாமி கோயில், அம்மையப்பர் கோயில், கிருஷ்ணர் கோயில், புருசோத்தம பெருமாள் கோயில், லெட்சுமி நாராயண பெருமாள் கோயில் என்று நிறையக் கோயில்கள் இங்கு உள்ளன.

ஆத்தங்கரை பள்ளிவாசல்
நெல்லையிலிருந்து 46 கி.மீ. தொலைவில் இந்தப் பள்ளிவாசல் உள்ளது. இங்கு சையத் அலி பாத்திமா மற்றும் ஷேக் முகமது இருவருக்கும் இரண்டு கோபுரக் கூடுகள் உள்ளன. இவர்கள் இருவரும் சூஃபி ஞானிகள், அனைத்து மதத்தினரும் வந்து வழிபடும்