Showing posts with label சமையல். Show all posts
Showing posts with label சமையல். Show all posts

Saturday, November 16, 2013

பூசணிக்காய் புதூர் பொரியல்

பூசணிக்காய்தேங்காய் துருவல்தனியா பொடி
  1. பூசணிக்காய் = அரை கிலோ
  2. வெங்காயம் = 2
  3. மிளகாய் பொடி = கால் ஸ்பூன்
  4. தனியா பொடி = கால் ஸ்பூன்
  5. மஞ்சள் பொடி = சிறிதளவு
  6. தேங்காய் துருவல் = 4 ஸ்பூன்
  7. கடுகு = அரை ஸ்பூன்
  8. உளுத்தம் பருப்பு = அரை ஸ்பூன்
  9. எண்ணெய் = 2 ஸ்பூன்
  10. உப்பு = தேவையான அளவு
செய்முறை:
  • பூசணிக்காயை தோலும், விதையும் நிக்கி விட்ட பின் காலங்குல துண்டுகளாக நறுக்கவும். வெங்காயம் நறுக்கவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்த பின் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்துக் கொண்டு கீறிய பச்சை மிளகாய், வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
  • அவை வதங்கியதும் பூசணிக்காயை சேர்த்து சிறிது

தயிர் குருமா

தயிர்கேரட்ஜாதிக்காய் பொடி
தேவையான பொருள்கள்:
  1. தயிர் = 2 கப்
  2. தேங்காய் = 1 மூடி
  3. பச்சை மிளகாய் = 6
  4. கசகசா = 2 ஸ்பூன்
  5. துவரம் பருப்பு = 3 ஸ்பூன்
  6. மிளகு = 1 ஸ்பூன்
  7. சீரகம் = அரை ஸ்பூன்
  8. கேரட் = 100 கிராம்
  9. பீன்ஸ் = 100 கிராம்
  10. இஞ்சி பூண்டு விழுது = 2 ஸ்பூன்
  11. பட்டை = 2
  12. கிராம்பு = 3
  13. ஏலக்காய் = 3
  14. மிளகாய் வற்றல் = 3
  15. எலுமிச்சை சாறு = 1 ஸ்பூன்
  16. ஜாதிக்காய் பொடி = கால் ஸ்பூன்
  17. எண்ணெய் = 4 ஸ்பூன்
  18. உப்பு = தேவையான அளவு
செய்முறை:
  • தயிரை கடைந்து உப்பு போட்டு வைக்கவும். தேங்காயை, பச்சை மிளகாயை ஊற வைத்த துவரம் பருப்பு, மிளகு, சீரகம் அரைக்கவும். பீன்ஸையும், கேரட்டையும் விரல் பருமனில் ஓரங்குல துண்டுகளாக நறுக்கவும்.
  • பாதி எண்ணெயில் பீன்ஸ், கேரட்டை சேர்த்து இஞ்சி பூண்டு விழுது

சுண்டைக்காய் புளி கறி

புளிசுண்டைக்காய்சின்ன வெங்காயம்
தேவையான பொருள்கள்:
  1. சுண்டைக்காய் = கால் கிலோ
  2. புளி = சிறிய எலுமிச்சை அளவு
  3. சின்ன வெங்காயம் = 50 கிராம்
  4. மிளகாய் பொடி = 1 ஸ்பூன்
  5. தனியா பொடி = அரை ஸ்பூன்
  6. ஓமம் = அரை ஸ்பூன்
  7. வெல்லம் = சிறிதளவு
  8. எண்ணெய் = அரை கரண்டி
  9. உப்பு = தேவையான அளவு
செய்முறை:
  • சுண்டைக்காயை தட்டி சிறிது நேரம் ஊற விட்ட பின் தேய்த்து விதை போகும் படி கழுவி நீர் வடிய விடவும். சின்ன வெங்காயம் உரித்து முழுதாகவே வைத்துக் கொள்ளவும். ஓமத்தை லேசாக வறுத்து பொடித்துக் கொள்ளவும்.
  • புளியை மிகவும் கெட்டியாக அரை கப் நீரில் கரைத்துக் கொள்ளவும். வெல்லத்தை

மைசூர் சாம்பார்

துவரம் பருப்புபயத்தம் பருப்புவெங்காயம்
தேவையான பொருள்கள்:
  1. துவரம் பருப்பு = 100 கிராம்
  2. பயத்தம் பருப்பு = 100 கிராம்
  3. இஞ்சி = காலங்குலம்
  4. மிளகாய் பொடி = 1 ஸ்பூன்
  5. மஞ்சள் பொடி = சிறிதளவு
  6. வெங்காயம் = 2
  7. தக்காளி = 100 கிராம்
  8. புளி = அரை எலுமிச்சை அளவு
  9. வெல்லம் = சிறிதளவு
  10. கடுகு = அரை ஸ்பூன்
  11. சீரகம் = அரை ஸ்பூன்
  12. கடலை பருப்பு = 1 ஸ்பூன்
  13. உளுத்தம் பருப்பு = 1 ஸ்பூன்
  14. எண்ணெய் = 2 ஸ்பூன்
  15. உப்பு = தேவையான அளவு
செய்முறை:
  • துவரம் பருப்பு, பயத்தம் பருப்பு இரண்டையும் தோல் நீக்கித் தட்டிய இஞ்சியையும் சேர்த்துக் குக்கரில் வைத்து வேக விட்டுக் கடைந்து கொள்ளவும். புளியை ஊற வைத்து கரைத்து வடிகட்டவும். வெங்காயத்தையும், தக்காளியையும் சற்று பெரிய துண்டுகளாக நறுக்கவும்.
  • குக்கரில் வெந்த பருப்போடு, மிளகாய் பொடி, மஞ்சள்

வெங்காய வற்றல் குழம்பு

சின்ன வெங்காயம்புளிமிளகாய் வற்றல்
தேவையான பொருள்கள்:
  1. சின்ன வெங்காயம் = 150 கிராம்
  2. மிளகாய் பொடி = 2 ஸ்பூன்
  3. தனியா பொடி = 3 ஸ்பூன்
  4. மஞ்சள் பொடி = சிறிதளவு
  5. பெருங்காயப்பொடி = சிறிதளவு
  6. பச்சை மிளகாய் = 2
  7. மிளகாய் வற்றல் = 3
  8. புளி = ஒரு  எலுமிச்சை அளவு
  9. வெந்தயம் = அரை ஸ்பூன்
  10. கடுகு = அரை ஸ்பூன்
  11. எண்ணெய் = 4 ஸ்பூன்
  12. உப்பு= தேவையான அளவு
செய்முறை:
  • புளியை 2 டம்ளர் தண்ணீரில் சிறிது ஊற வைத்துக் கரைத்து வடிகட்டவும். வெங்காயத்தை உரித்து முழுதாக வைக்கவும். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும்.
  • கரைத்த புளியில் மிளகாய் பொடி, தனியா பொடி, பெருங்காயப்பொடி, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்துக் கரைத்துக் கொள்ளவும்.
  • எண்ணெயில் வெந்தயம், கடுகு, கறிவேப்பிலை, மிளகாய் வற்றல்

மோர்க்குழம்பு

தயிர்சீரகப்பொடிமிளகாய் பொடி
தேவையான பொருள்கள்:
  1. தயிர் = ஒன்றரை கப்
  2. மிளகாய் பொடி = 1ஸ்பூன்
  3. பொட்டுக்கடலை = 3 ஸ்பூன்
  4. சீரகப்பொடி = அரை ஸ்பூன்
  5. இஞ்சி = காலங்குலம்
  6. பூண்டு = 10 பல்
  7. எலுமிச்சை பழம் = 1 மூடி
  8. பச்சை மிளகாய் = 2
  9. பெருங்காயம் = சிறிதளவு
  10. கடுகு = அரை ஸ்பூன்
  11. உளுத்தம் பருப்பு = 1 ஸ்பூன்
  12. எண்ணெய் = 2 ஸ்பூன்
  13. உப்பு = தேவையான அளவு
செய்முறை:
  • தயிரக் கடைந்து ஒரு கப் தண்ணீர் விடவும். பொட்டுக்கடலை, இஞ்சி, உரித்த பூண்டு ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
  • அரைத்த விழுதையும், உப்பையும், மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, சீரகப்பொடி ஆகியவற்றை அரை கப் தண்ணீரில் கொதிக்க விடவும்.
  • கொதித்ததும் கடைந்த தயிரை விட்டு ஒரு கொதி விடவும். இறக்கி

பட்டாணி குருமா

பச்சை பட்டாணிபச்சை மிளகாய்தக்காளி
தேவையான பொருள்கள்:
  1. பச்சை பட்டாணி = 200 கிராம்
  2. பச்சை மிளகாய் = 6
  3. தக்காளி = கால் கிலோ
  4. பூண்டு = 1 முழுதாக
  5. வெங்காயம் = 2
  6. தேங்காய் = 1 மூடி
  7. இஞ்சி = அரையங்குலம்
  8. முந்திரி பருப்பு = 10
  9. பொட்டு கடலை = 4 ஸ்பூன்
  10. கசகசா = 2 ஸ்பூன்
  11. சோம்பு = 1 ஸ்பூன்
  12. ஏலக்காய் = 3
  13. பட்டை = 2
  14. கிராம்பு = 3
  15. பிரிஞ்சி இலை = 1
  16. ஜாதிக்காய் பொடி = கால் ஸ்பூன்
  17. எண்ணெய் = 4 ஸ்பூன்
  18. உப்பு = தேவையான அளவு
செய்முறை:
  • பச்சை பட்டாணியை உரித்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, பூண்டு நீளவாட்டில் அரிந்து கொள்ளவும்.
  • தேங்காய், இஞ்சி, முந்திரி பருப்பு, பொட்டு கடலை, கசகசா, சோம்பு, ஏலக்காய் ஆகியவற்றை அரைத்துக் கொள்ளவும். பட்டை, கிராம்பை சிறிது தட்டிக்

சேப்பங்கிழங்கு சாம்பார்

மஞ்சள் பொடிசேப்பங்கிழங்குதுவரம் பருப்பு
தேவையான பொருள்கள்:
  1. சேப்பங்கிழங்கு = கால் கிலோ
  2. துவரம் பருப்பு = 200 கிராம்
  3. மிளகாய் பொடி = ஒன்றரை ஸ்பூன்
  4. தனியா பொடி = அரை ஸ்பூன்
  5. மஞ்சள் பொடி = சிறிதளவு
  6. பெருங்காயம் = சிறிதளவு
  7. கடுகு = அரை ஸ்பூன்
  8. சீரகம் = அரை ஸ்பூன்
  9. எண்ணெய் = 3 ஸ்பூன்
  10. உப்பு = தேவையான அளவு
செய்முறை:
  • துவரம் பருப்பை மஞ்சள் பொடி, பெருங்காயம் சேர்த்து குழைய வேக விடவும். சேப்பங்கிழங்கை முழுதாக வேக விட்டுக் கொண்டு உரித்து துண்டு போடவும். புளியை சிறிது கெட்டியாக கரைக்கவும்.
  • புளித்தண்ணீரில் சேப்பங்கிழங்கு துண்டுகளை 10 நிமிடம் நனைத்து வைக்கவும். மிளகாய் பொடி, தனியா பொடியை பருப்போடு சேர்த்து

புளிச்சக்கீரை பனீர் மசாலா குழம்பு

புளிச்சக்கீரைபுளிபனீர்
தேவையான பொருள்கள்:
  1. புளிச்சக்கீரை = 1 கட்டு
  2. புளி = எலுமிச்சை அளவு
  3. மிளகாய் பொடி = 1 ஸ்பூன்
  4. தனியா பொடி = 1 ஸ்பூன்
  5. மஞ்சள் பொடி = சிறிதளவு
  6. பச்சை மிளகாய் = 4
  7. மிளகாய் வற்றல் = 2
  8. கசகசா = 2 ஸ்பூன்
  9. தேங்காய் துருவல் = 4 ஸ்பூன்
  10. தக்காளி = 4
  11. பனீர் = 100 கிராம்
  12. வெந்தயம் = அரை ஸ்பூன்
  13. எண்ணெய் = கால் கப்
  14. உப்பு = தேவையான அளவு
செய்முறை:
  • புளியை தேவையான தண்னீரில் கரைத்து வடிகட்டவும். புளிச்சக்கீரையை ஆய்ந்து கொள்ளவும். சிறிது எண்ணெயில் கசகசாவை வறுத்து 

புளிக்குழம்பு

பச்சை மிளகாய்புளிதேங்காய் துருவல்
  1. புளி = எலுமிச்சை அளவு
  2. தேங்காய் துருவல் = 2 ஸ்பூன்
  3. பச்சை மிளகாய் = 2
  4. மிளகாய் பொடி = ஒன்றரை ஸ்பூன்
  5. தனியா பொடி = 3 ஸ்பூன்
  6. சர்க்கரை = 1 ஸ்பூன்
  7. மஞ்சள் பொடி = சிறிதளவு
  8. வெந்தயம் = அரை ஸ்பூன்
  9. பட்டை = 2
  10. எண்ணெய் = 4 ஸ்பூன்
  11. உப்பு = தேவையான அளவு
செய்முறை:
  • புளியைத் தேவையான தண்ணீர் விட்டுக் கரைத்துக் கொள்ளவும். இதில் உப்பு, மிளகாய் பொடி, தனியா பொடி, மஞ்சள் பொடி சேர்த்துக் கரைத்துக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாயையும், தேங்காய் துருவலையும் சேர்த்து அரைத்துக் கரைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் பட்டை, வெந்தயம், கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்துத் தாளித்துக் குழம்பை விட்டு

முருங்கைக்காய் சாம்பார்

உளுத்தம் பருப்புமுருங்கைக்காய்துவரம்பருப்பு
  1. முருங்கைக்காய்= 4
  2. துவரம் பருப்பு = 200 கிராம்
  3. மஞ்சள் பொடி = சிறிதளவு
  4. பெருங்காயம் = சிறிதளவு
  5. வெங்காயம் = 2
  6. பச்சை மிளகாய் = 3
  7. மிளகாய் பொடி = 1 ஸ்பூன்
  8. தனியா பொடி = அரை ஸ்பூன்
  9. புளி = எலுமிச்சை அளவு
  10. கடுகு = அரை ஸ்பூன்
  11. உளுத்தம் பருப்பு = 1 ஸ்பூன்
  12. மிளகாய் வற்றல் = 2
  13. எண்ணெய் = 2 ஸ்பூன்
  14. உப்பு = தேவையான அளவு
செய்முறை:
  • துவரம் பருப்பை மஞ்சள் பொடி, பெருங்காயம் சேர்த்துக் குழைய வேக விட்டுக் கொள்ளவும். முருங்கைக்காயை இரண்டங்குலத் துண்டுகளாக நறுக்கவும். வெங்காயம் நறுக்கவும். பச்சை மிளகாயைக் கீறிக் கொள்ளவும். புளியைக் கரைத்துக் கொள்ளவும்.
  • கரைத்த புளியில் பச்சை மிளகாய், வெங்காயம், முருங்கைக்காய் சேர்த்து உப்பு போட்டு மிளகாய் பொடி, தனியா பொடி சேர்த்து மூடி

வாழைக்காய் வடை

வாழைக்காய்சோம்புகடலை மாவு
தேவையான பொருள்கள்:
  1. வாழைக்காய் = 2
  2. கடலை மாவு = 3 ஸ்பூன்
  3. சோம்பு = 1 ஸ்பூன்
  4. சின்ன வெங்காயம் = 100 கிராம்
  5. பச்சை மிளகாய் = 4
  6. இஞ்சி = காலங்குலம்
  7. எண்ணெய் =150 கிராம்
  8. உப்பு = தேவையான அளவு
செய்முறை:
  • வாழைக்காயை 2 துண்டுகளாக நறுக்கி குக்கரில் வைத்து வெயிட் போடாமல் 1 நிமிடம் வைத்து எடுக்கவும். பிறகு இதை தோல் உரித்துக் கொள்ளவும்.
  • சோம்பை பொடி செய்யவும். சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கறிவேப்பிலை, கொத்தமல்லி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இவை எல்லாவற்றையும் கலந்து சிறிது

வற்றல் குழம்பு

புளிதனியா பொடிமிளகாய் வற்றல்
தேவையான பொருள்கள்:
  1. புளி = எலுமிச்சை அளவு
  2. மிளகாய் வற்றல் = 8
  3. தனியா பொடி = 3 ஸ்பூன்
  4. தேங்காய் துருவல் = 3 ஸ்பூன்
  5. வெங்காயம் = 2
  6. தக்காளி = 2
  7. சீரகம் = அரை ஸ்பூன்
  8. கடுகு = அரை ஸ்பூன்
  9. எண்ணெய் = 4 ஸ்பூன்
  10. உப்பு = தேவையான அளவு
செய்முறை:
  • புளியை தேவையான அளவு தண்ணீரில் கரைத்து வடிகட்டவும்.மிளகாயை இரண்டிரண்டாகக் கிள்ளி விதைகளை உதிர்த்து விட்டு சிறிது ஊற விட்டு தேங்காயோடு அரைத்து புளித்தண்ணீரில் கலக்கவும்.
  • உப்பு, தனியா பொடி, மஞ்சள் பொடி கலக்கவும். தக்காளி, வெங்காயம் தனி தனியாக

அவல் பொங்கல்

அவல்வெல்லம்பாசிப்பயிறு
தேவையான பொருட்கள்:
செய்முறை:
  1. வெல்லத்தை பொடித்து தண்ணீரில் கலந்து வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
  2. பாசிப்பருப்பை குழைய வேகவைத்துக் கொள்ள வேண்டும்.
  3. அவலை வெந்நீரில் ஊறவைத்துக் கொள்ள வேண்டும்.
  4. வெட்டி வைத்திருக்கும் தேங்காய் சில்லில் பாதியை நெய்யில் வறுத்து ஆற வைக்கவும்.
  5. வெந்த பாசிப்பருப்புடன், ஊறவைத்த அவலை சேர்க்கவும். அதனுடன் வெல்லப்பாகு கலந்து, பால், தேங்காய் பால் ஊற்றி கொதிக்க விடவும்.
  6. அடிபிடிக்காமல் கிளறிக்கொண்டே இருக்கவும். மறக்காமல் ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும். உப்பு அதிகமாக சேர்த்து விடக் கூடாது.
  7. நன்கு குழைந்து பொங்கல் பதத்துக்கு வந்தவுடன், இறக்கி நெய்யில் வறுத்த ஏலக்காய், முந்திரிப் பருப்பு, உலர்ந்த திராட்சை பழம், வறுத்த மீதமுள்ள தேங்காய் சில், நெய் ஊற்றி கிளறி