Showing posts with label ஆரோக்கியம். Show all posts
Showing posts with label ஆரோக்கியம். Show all posts

Thursday, November 14, 2013

தோலுக்கு மினு மினுப்பை தரும் சைவ உணவுகள்!


சைவ உணவுகளை எடுத்துக்கொள்வது உங்களது உடல் நலனுக்கு எந்தெந்த வகையிலெல்லாம் நல்லது என்பது குறித்து மருத்துவ மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் தரும் விளக்கம் இங்கே:

நச்சுக்களை அகற்றுபவை:
நார்சத்து மிகுந்த சுரைக்காய், பூசணி, பசலைக்கீரை மற்றும் முட்டைகோஸ் ஆகியவை சைவ உணவ வகைகளில் மிக முக்கியமானவை. உடலில் சேரும் நச்சுகளை அகற்றும் திறன் மேற்கூறிய காய்கறிகளுக்கு உண்டு. அதே சமயம் முட்டை, மீன் மற்றும் இறைச்சி போன்றவற்றில் புரதச்சத்து இருக்கும் அளவுக்கு நார்ச்சத்து இருப்பதில்லை.
எலும்புகளை வலுவாக்குபவை:
இறைச்சி உடலில் புரதத்தை அதிகமாக்கி, கொழுப்பை கூட்ட வழி வகுக்க கூடியது. மேலும் நமது சிறுநீரகத்திற்கு அதிக வேலைப் பளுவை ஏற்படுத்த செய்வதோடு, எலும்பிலுள்ள கால்சியத்தையும் உறிஞ்சி விடுகிறது. அதே சமயம் சைவ உணவில் இந்த பிரச்சினை இல்லை.

அழகு.. ஆண்மை.. வெண்டைக்காய்…

வெண்டைக்காயின் பூர்வீகம் எத்தியோப்பியா. அங்கிருந்து அரேபியா, நைல் நதியோரத்தைச் சேர்ந்த நாடுகளுக்கு வந்து, இந்திய மண்ணில் அடியெடுத்து வைத்துள்ளது. அடிமை வியாபாரத்தைத் தொடங்கிய காலகட்டத்தில், ஆப்பிரிக்க அடிமைகள் இதை அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேலைநாடுகளுக்கு எடுத்துச் சென்றனர்.

ஆப்பிரிக்கர்கள் `கம்போ’ என்று ஒருவகை சூப் தயாரித்தனர். இந்த சூப் கெட்டியாவதற்காக வெண்டைக்காயை உபயோகித்து வந்தனர். இதைப் பொடி செய்து சூப்பில் சேர்ப்பார்கள். ஆப்பிரிக்க பாஷைகளில் ஒன்றான ஸ்வாஹிலியில் கம்போ என்றால் வெண்டைக்காய் என்று அர்த்தம். இளசாக இருக்கும் வெண்டை மென்மையாகவும், நீளமாகவும், நுனி கூர்மையாகவும் இருப்பதால், ஆங்கிலத்தில் இதை `லேடீஸ் பிங்கர்’ என்று அழைக்கின்றனர்.

பழங்காலத்தில் உள்ள மக்களுக்கு இதை எப்படி சமைப்பது என்று தெரிய வில்லை. அதனால் அந்த காலத்தில் விவசாயிகளும் இதை செடியில் இருந்து பறிக்காமல் இருந்து விட்டனர். முற்றிய வெண்டைக்காயை பறித்த சிலர், அதன் ருசி பிடிக்காமல் வெறுத்தனர். பிற்காலத்தில் தான் இதை எப்போது பறிக்கப்பட வேண்டும்? எப்படி சுவைக்க வேண்டும் என்று அறிந்திருக்கிறார்கள்.

Wednesday, November 13, 2013

காலையில் தவறாமல் செய்ய வேண்டிய சில பழக்கங்கள்!!!

காலையில் தவறாமல் செய்ய வேண்டிய சில பழக்கங்கள்!!!இன்றைய நவீன உலகில் நிறைய மாற்றங்கள் உள்ளன. அத்தகைய மாற்றங்களால், வாழ்க்கை முறையும், பழக்கவழக்கங்களும் மாறுகின்றன. இதனால் நிறைய பிரச்சனைகள் உடலில் ஏற்படுகின்றன. ஆகவே பலர் ஆரோக்கியமான பழக்கங்கள் என்று அதனை கண்ட நேரங்களில் செய்கின்றனர். ஆனால் அவ்வாறு கண்ட நேரத்தில் செய்தால், எந்த ஒரு பலனும் இல்லை. மேலும் ஆரோக்கியமான பழக்கம் என்பது எந்த ஒரு செயலையும் செய்ய வேண்டிய நேரத்தில் செய்வது தான். அதைவிட்டு, மற்ற நேரங்களில் செய்தால், அந்த ஆரோக்கியமான செயல்கள் கூட, ஆரோக்கியமற்றது தான். உதாரணமாக, தூங்கினால் விரைவில் எழுவது நல்ல பழக்கம் தான். ஆனால் அதிகாலையில் எழுவது தான், காலையில் செய்யும் பழக்கங்களில் ஆரோக்கியமானது. இது போன்று சாப்பிடுவது, குளிப்பது என்று ஒருசில உள்ளன. அத்தகைய செயல்களை சரியாக காலை வேளையில் செய்து வந்தால், வாழ்க்கையே மிகவும் ஆரோக்கியமாகவும், சூப்பராகவும் செல்லும். சரி, இப்போது காலையில் செய்ய வேண்டிய ஆரோக்கியமான செயல்கள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து பின்பற்றுங்களேன்…
அதிகாலையில் எழுவது அன்றைய தினமானது நன்கு ஆரோக்கியமானதாகவும், மகிழ்ச்சி தரக்கூடியதாகவும் இருக்க வேண்டுமெனில், அதற்கு முதலில் காலையில் சீக்கிரம் எழ வேண்டும். இதனால் உடல் நன்கு சுறுசுறுப்புடன் இருப்பதோடு, புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.

Sunday, July 14, 2013

"அல்சர் அவஸ்தியிலிருந்து விடுபட!"
உடல் மெலிவாக இருப்பது அழகு தான். அதற்காக சாப்பிடாமல் பட்டினி கிடப்பதால் அல்சர் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.

இந்த அல்சர் உருவாவதற்கு காரணம்கேஸ்டிரைடிஸ்என அழைக்கப்படும் இரைப்பையில் ஏற்படும் ஒரு வகையான வீக்கம். இந்த நோய் தென்மாநிலத்தை சேர்ந்தவர்களை அதிகம் தாக்குகிறது. இன்னொரு விடயம் வேலையில் காட்டும் அவசரம்.

Monday, May 6, 2013



எலுமிச்சம்பழத்தின் மருத்துவக்குணம்

குறைந்த விலையில் நிறைந்த பயன் தரக்கூடிய பழவகைகளில் ஈடு இணையற்றது எலுமிச்சம்பழம். வாகடத்தில் இதை அரச கனி என்று கூறுவார்கள்.

இதன் மருத்துவப்பலன்களைப் பெரிய பட்டியில் இட்டே கூறலாம். அவையாவன:




பித்தத்தைப்போக்கும். தலைவலியைத்தீர்க்கும், மலச்சிக்கலைப்போக்கும், தொண்டைவலியைப்போக்கும்,வாந்தியை நிறுத்தும், காலாராக்கிருமியை ஒழிக்கும்,பல் நோய்களைக்குணப்படுத்தும்,டான்சில் வராமல் தடுக்கும், விஷத்தைமுறிக்கும், தேள் கடிக்கு உதவும்,வாய்ப்புண்ணை ஆற்றும்,மஞ்சள் காமாலையை நீக்கும்,வீக்கத்தைக்குறைக்கும்,வாயுவை அகற்றும்,பசியை உண்டாக்கும், விரல் சுற்றுக்கு நிவாரணமாகும், யானைக்கால் வியாதியைக்குணப்படுத்தும். ஓட்டலில் அல்லது வெளிச்சாப்பாட்டுக் கடைகளில் சாப்பிடுபவர்கள் சுத்தம் அற்ற, நன்றாக வேகாத சமையலை உண்பதால் ஏற்படக்கூடிய வயிற்றுத் தொல்லையில் இருந்து விடுபட இரண்டு எலுமிச்சம்பழச்சாற்றுடன் நல்ல பெருங்காயத்தூள் கொஞ்சம், சிறிது உப்பு சேர்த்து தினம் குடித்து வருவது பெரும் நன்மையை அளிக்கும்.

Sunday, May 5, 2013

 வெள்ளரி - 25 மருத்துவ பயன்கள் 


1. காய்கறிகளுள்ளே குறைவான கலோரி அளவைக் கொண்டிருப்பது வெள்ளரிக்காய்தான். 100 கிராம் வெள்ளரிக்காயில் கிடைக்கும்கலோரி 18தான்.

2. விஞ்ஞானிகள் வெள்ளரிக்காயைப் பழவகையில் சேர்த்துள்ளனர்; ஆனால், மக்கள் இதைக்காய்கறிப் பட்டியலில் சேர்த்துள்ளனர்;பச்சையாகவும், சமையலில் சேர்த்தும் சாப்பிடுகின்றனர். 

Saturday, February 16, 2013

ஜிங்க் சத்துக்கள் அதிகம் உள்ள உணவுகள்..!


அனைவருக்குமே ஜிங்க் சத்துக்கள் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும் என்று தெரியும். அத்தகைய சத்து குறிப்பிட்ட உணவுகளில், அதுவும் அளவாகத் தான் இருக்கும். ஆனால் அந்த சத்து உடலுக்கு போதிய அளவு வேண்டும். இல்லையெனில் உடலில் எந்த ஒரு செயல்பாடும் சரியாக நடைபெறாது. எனவே அத்தகைய சத்துக்கள் உள்ள உணவுகள் என்னவென்று தெரிந்து கொண்டு, அதனை உணவில் சேர்க்க வேண்டும். ஜிங்க் சத்தில் அதிகமான நன்மைகள் உள்ளன. அதிலும் ஜிங்க் உணவுகளை அதிகம் சாப்பிட்டால் நீரிழிவைத் தடுக்கலாம். எனவே அந்த சத்துள்ள உணவுகளை சாப்பிடுவதில் கவனம் செலுத்துங்கள் என்று சொல்கிறார்கள் மருத்துவர்கள். 
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முள்ளங்கி..!

நாம் உண்ணும் உணவே சில சமயம் மருந்தாக செயல்படுகிறது. காய் வகைகளில் ஒன்றான முள்ளங்கியில் பல்வேறு பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. கோடை காலத்தில் உடலுக்கு உஷ்ணம் அதிகம் அதிகம் ஏற்படாமல்பாதுகாப்பதில் முள்ளங்கிக்கு முக்கிய பங்குண்டு. அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட முள்ளங்கியில் உடலுக்கு தேவையான வைட்டமின்சத்துக்களும் தாது உப்புக்களும் உள்ளன. 
பழங்களை எப்போது எப்படி சாப்பிட வேண்டும்..!

காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிட்டால் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப்பொருட்களை மலமாக வெளியேற்றும். இதனால், உடலுக்கு புத்துணர்ச்சியும், தெம்பும் கிடைக்கும்.

சாப்பிட்ட பின்பு பழம் சாப்பிட்டால் முதலில் பழம்தான் ஜீரணமாகும். உணவுகள் செரிக்க கூடுதல் நேரமாகும்.

வேர்க்கடலையில் உள்ள மருத்துவ குணங்கள் !!

உலகம் முழுவதும் எளிதில் தங்கு தடையின்றிக் கிடைக்கும் முக்கியமான ஊட்டச்சத்து உள்ள உணவுப் பொருள்களுள் நிலக்கடலையும் ஒன்றாகும்.வேர்க்கடலையில் உள்ள புரதம் சரிவிகிதமாக அமைந்திருக்கிறது. எனவே, குழந்தைகள் வளர்ச்சி தடையின்றி இருக்க நிலக்கடலை நல்லது.

பாலின் மகத்துவம்..!



பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பால் அவசியம். ஏதோ ஒரு காரணத்தால் குழந்தைக்குத் தாய்ப்பால் கிடைக்காமல் போனால், அதற்கு மாற்று பசும்பால் தான். கிட்டத்தட்ட தாய்ப்பாலுக்கு இணையான குணங்களும், குழந்தைக்கு ஊட்டம் கொடுத்து வளர்க்கும் தன்மையும் பசும்பாலில் மட்டும்தான் இருக்கிறது! பால், பசுவின் ரத்தம் இல்லை. அது தாவரங்களின் உயிர்ச் சத்து. பசு சாப்பிடும் பச்சைத் தாவரங்களின் உயிர்ச்சத்து, பசுவின் உடலில் போய் மாற்றம் பெற்று, பாலாக வருகிறது.

பல் சொத்தைப் பற்றி சில தகவல்கள்..!



பல் சொத்தை என்றதும், பல்லை புடுங்கலாமா? சிமெண்ட் வைத்து அடைக்கலாமா என்று யோசிக்கிறோமேத் தவிர பல் சொத்தை ஏன் எப்படி ஏற்படுகிறது என்று ஆராய்கிறோமா? ஏன் ஆராய வேண்டும் என்று கேட்கலாம்? அப்படி ஆராய்ந்து உண்மையை அறிந்தால்தான் அடுத்த பல்லை சொத்தையாகாமல் தடுக்கலாம்.

பல் சொத்தை பற்றி யோகா ஆசிரியர் சுப்ரமணியம் கூறுகிறார்.

தூங்கும் போது வரும் குறட்டைக்கு என்ன தீர்வு ?



மனிதர்கள் விடும் குறட்டை குறித்தும், அதை தடுப்பது பற்றியும் அமெரிக்காவை சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுகளை மேற்கொண்டனர். சாதாரண மனிதர்களிடமும், நோயாளிகளிடமும் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. மூச்சு விடுதலில் ஏற்படும் சிரமங்கள் தான் குறட்டையாக வெளி வருகிறது.

Saturday, February 2, 2013

தரமற்ற குடிநீர் ஓர் எச்சரிக்கை தகவல்..!

வீடுகளுக்கு வரும் ‘வாட்டர் கேன்’களில் 60 சதவீதம் தண்ணீர் தரமற்றதாக உள்ளது. இதுபோன்ற தரமற்ற தண்ணீரை குடித்தால், நிமோனியா தொற்று ஏற்பட்டு நுரையீரல் பாதிக்கும் அபாயம் உள்ளதாக டாக்டர்கள் எச்சரித்துள்ளனர். கோடை காலம் தொடங்கி விட்டதால், தண்ணீர் தாகமும் அதிகரிக்கும். தாகம் ஏற்படும்போது கிடைக்கும் தண்ணீரை குடிப்பது,

புதினாக்கீரையின் ம‌க‌த்துவ‌ம்..!



சிறு குழந்தைகளின் வயிற்றுப் போக்கு, வாந்தி குணமாக:
சிறு குழந்தைகளுக்கு ஆகார விகற்பத்தின் காரணமாக வயிற்றுப் போக்கு வாந்தி ஏற்படுவதுண்டு. இதற்குப் பல வகையான மருந்துகள் உண்டு என்றாலும் புதினாக்கீரைக் கஷாயம் கைகண்ட மருந்தாக இருக்கிறது. புதினாக்கீரை இலைகளை மட்டும் ஆய்ந்து எடுத்து ஒரு கைப்பிடியளவு அம்மியில் வைத்து லேசாக

Sunday, January 27, 2013


சுண்டக்காயின் மருத்துவ குணம் !!!!

கசப்பான விசையங்கள் என்றும் வாழ்கையில் நல்ல விசையமாக இருக்கு ...

சுண்டைக்காய், கசப்புச்சுண்டை, கறிச்சுண்டை என்று கசப்புடனும் கசப்பின்றியும் கிடைக்கின்றது. சுண்டக்காயை வாங்கி மோரில் ஊறவைத்து, வற்றலாகப் போட்டு வறுத்தும், குழம்பில் சேர்த்தும் சாப்பிடலாம். கசப்பு சுண்டைக்காய், கறிச்சுண்டைக்காய் இரண்டுமே வாயுத் தொந்தரவு மற்றும் வயிற்றில் உள்ள கிருமிகளுக்கு நல்ல மருந்து ஒரு குடும்பத்தினருக்கு (5 பேர் அடங்கியது) வருடத்திற்கு 2 லிட்டர் கசப்பு சுண்டைக்காய் உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டு வர, கிருமித் தொந்தரவு இருக்காது அமிபீயாஸிஸ் போன்ற கிருமிகளையும் சுண்டைக்காய் விரட்டி விடும். நீரிழிவு நோய்க்கு மருந்தாகும் சுண்டைக்காய் கிருமிகளை ஒழிக்கும் சுண்டைக்காய்.


மூளை வளர்ச்சியடைய உண்ண வேண்டிய உணவுகள்..!

ஞாபக சக்தி குறைவாக இருக்கிறதா?
 எதிலும் அதிக கவனத்துடன் ஈடுபட முடியவில்லையா?
 மூளை சரியாகச் செயல் படவும் நன்றாக வளரவும் தேவையான சத்துக்கள் நாம் சாப்பிடும் உணவிலிருந்து கிடைக்காததே இதற்குக் காரணம். காரட், தக்காளி, திராட்சை. ஆரஞ்சு, செர்ரி போன்ற பள பளப்பான வண்ண உணவுகளில் மூளைக்கு மிகத் தேவையான வைட்டமின்கள், மினரல்ஸ்கள், பைட்டோ கெமிக்கல்கள் நிறைந்துள்ளன.

பீட்ரூட்டில் உள்ள எண்ணற்ற மருத்துவக் குணங்கள் !!!

பீட்ரூட்டில் மாவுச்சத்து அதிகம் உள்ளது. கண்ணுக்கும், உடலுக்கும் குளிர்ச்சி தரும். இரத்தத்தின் கழிவுகளை அகற்றி சுத்தம் செய்கிறது. வயிற்று பிரச்சனைகள் தீரும்.

பீட்ரூட்டை சமைச்சோ, பச்சையாவோ சாப்பிடுறப்ப மலச்சிக்கல், கல்லீரல் கோளாறு, பித்தக்கோளாறு எல்லாம் சரியாகும்.

மற்ற கீரைகளைப் போல, பீட்ரூட் கீரையையும் சாப்பிடலாம். அல்சர்னு சொல்லப்படுற வயிற்றுப்புண், மஞ்சள்காமாலை இதையெல்லாம் இந்தக் கீரை குணமாக்கும்.



இரத்தத்தை உற்பத்தி செய்யும் வெந்தயக்கீரை!

வெந்தயக் கீரையில் அதிகளவு வைட்டமின் ஏ சத்தும், சுண்ணாம்பு சத்தும் அதிகளவு காணப்படுகின்றது. வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு வதக்கி, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு, ஒரு டம்ளர் அளவிற்குச் சுண்டக்காய்ச்சி காலை, மாலை அரை டம்ளர் வீதம் கொடுத்து வந்தால் நெஞ்சுவலி பூரணமாகக் குணமாகும்.

உடலுக்கு நல்ல பலனை தருவதுடன், புதிய இரத்தத்தை உற்பத்தி செய்யும்.


மார்பகப் புற்றுநோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் ஆப்பிள்

 பழத்தில் அதிகமாக உள்ளது !!!

பொதுவாக உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களை பார்க்க செல்லும்போது, ஆப்பிள் கொடுப்பது வழக்கம். அந்த அளவுக்கு ஆப்பிளில் நோய் எதிர்ப்பு சக்தியும், ஊட்டச் சத்தும் நிறைந்திருக்கிறது.ஆப்பிள் குறித்து மேற்கொள்ளப்பட்ட புதிய ஆராய்ச்சியில் தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவது, நோயில் இருந்து பாதுகாப்பு அளிப்பதுடன் நீண்ட ஆயுளை அளிக்கும் என்பது தெரியவந்துள்ளது. சீனாவை சேர்ந்த ஹாங்காங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஸென் யூ சென் தலைமையில் மேற்கொண்ட ஆராய்ச்சியின் வெளிப்பாடு இது.