Monday, December 30, 2013

முதுகெலும்பு வலுவடைய செய்யும் பயிற்சி

முதுகெலும்பு வலுவடைய செய்யும் பயிற்சிபொதுவாக அசையும் மூட்டுப்பகுதிகளான இடுப்பு, முதுகு, கால் மூட்டுகளில் தான் அதிகளவு வலி ஏற்படும். இதற்கு காரணம் இந்த பகுதிகள் அதிகமாக செயல்படும போது எலும்பு தேய்மானம் ஏற்பட்டு ஒன்றுடன் ஒன்று உரசும் அளவுக்கு சென்று அதனால் தான் வலி ஏற்படுகிறது. இந்த பிரச்சனை தீர உரிய பயிற்சிகளை செய்து வந்தால் இதை தவிர்க்க முடியும். கீழே உள்ள பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் முதுகெலும்பு நன்கு வலிமையடையும்.இந்த பயிற்சி செய்ய முதலில்
தரையில் மல்லாந்து படுத்து கொள்ளவும். 

பின்னர் இரண்டு கால் மூட்டிகளையும் மடித்து கொள்ளவும். கைகளைத் தலைக்கு மேலே பின்புறமாகக் கொண்டு சென்று தரையில் பதிக்கவும். இந்த நிலையில் இருந்து கைகளை முன்னே கொண்டு சென்று தரையில் பதிக்க வேண்டும். 

ஓரிரு விநாடிகள் இடைவெளி விட்டு ஆரம்பத்தில் பத்து முதல் இருபது முறை செய்ய வேண்டும். நன்கு பழகிய பின்னர் 20 முதல் 30 முறை செய்யலாம். இந்த பயிற்சியை வேகமாக செய்ய கூடாது. 

மெதுவாக செய்ய வேண்டும். இந்த பயிற்சியை தொடர்ந்து 3 மாதங்கள் செய்து வந்தால் முதுகெலும்பு, கழுத்து நரம்புகள் வலுவடையும். தோள்பட்டை தசைகள் வலுவடைவதையும் காணலாம்.

இந்த பயிற்சி செய்யும் போது வலி அதிகமாக இருப்பவர்கள் எண்ணிக்கையின் அளவை குறைத்து கொண்டு மெதுவாக செய்ய வேண்டும்.

No comments: