Tuesday, December 31, 2013

கழுத்துக்கு வலிமை தரும் பயிற்சி

கழுத்துக்கு வலிமை தரும் பயிற்சிஉடல் உழைப்பு குறைந்து தொலைக்காட்சி, கம்யூட்டர் முன் நீண்ட நேரம் அமர்ந்திருப்பவர்களுக்கு நாளடைவில் கழுத்துத் தசை பாதிக்கபடும். அந்த இடத்தில் போதிய ரத்த ஓட்டம் இருக்காது. இதனால் கழுத்து மற்றும் கை,கால் பகுதிகளில் வலி ஏற்பட்டு, கழுத்துப் பகுதியை அசைக்க முடியாமல் போகும்.கழுத்துப் பகுதிக்கு வலு சேர்க்கும் சில எளிய பயிற்சிகள் உள்ளன. இந்த பயிற்சிகளை ஜீம்முக்கு சென்று தான் செய்ய வேண்டும் என்பதில்லை. உங்களுக்கு வீட்டில் நேரம் கிடைக்கும் போது தொடர்ந்து
செய்து வந்தால் போதும். இவற்றைத் தொடர்ந்து செய்து வந்தால் கழுத்து வலிப் பிரச்சனை படிப்படியாக மறையும். இந்த பயிற்சியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்... 

• அப் அண்டு டவுன்: விரிப்பில் நேராக நின்று கழுத்தை மட்டும் மேலும், கீழுமாக அசைக்க வேண்டும். இப்படித் தொடாந்து 15 வினாடிகள் செய்ய வேண்டும். 

• நெக் சைட் : தரையில் நேராக நின்று கொண்டு கழுத்தை வலது புறம் திருப்பி, பின் நேராக்கி அதன் பின் இடது புறம் திருப்ப வேண்டும். இப்படி 20 வினாடிகள் செய்ய வேண்டும். 

• நெக் ஸ்ட்ரெச்சிங் : கைகளை மோவாயில் வைத்தபடி கழுத்தைப் பின்னால் சாய்க்கவும். அந்த நிலையில் 20 நொடிகள் இருக்கவும். பிறகு பழைய நிலைக்குத் திரும்பவும். 

• நெக் ஃபார்வர்ட் பென்ட்:  கைகளை பின்னந்தலையில் வைத்தபடி கழுத்தை முன் பக்கமாக குனியவும். இந்த நிலையில் சில நொடிகள் இருக்கவும். 

பயன்கள்.... இந்த பயிற்சியை தொடர்ந்து செய்வதால் தோள்பட்டை தசைகள் வார்ம் அப் ஆகும். கழுத்து தசைகள் நன்றாக ஸ்ட்ரெச் ஆகும். இந்த பகுதிகளில் ரத்த ஓட்டமும், வளைந்து கொடுக்கும் தன்மையும் அதிகரிக்கும்.

No comments: