Monday, December 30, 2013

உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள்கொழுப்பை குறைக்கும்  : உடற்பயிற்சி உடம்பில் உள்ள நல்ல கொழுப்பினி அளவை கூட்டி, கெட்ட கொழுப்பின் அளவை குறைக்கும். மேலும் இதயத்தில் உள்ள தமனிகளில் இரத்தம் உறைதல் உருவாகுவதை தடுக்கும். தசைகளுக்கு வலிமை  : உடற்பயிற்சி தசைகளின் வலுவை அதிகரிக்க துணை புரியும். இதனால் வயதாகும் போது தசைகளின் இயக்கத்தை நிலைநிறுத்த உதவும். 

மனநிலையை ஊக்குவிக்கும்  : உணவு முறையை நம்புவதற்கு, பதிலாக உடற்பயிற்சியில் ஈடுபடுவது
நல்லது. ஏனெனில் உடற்பயிற்சி மூளையில் உற்பத்தியாகும் ரசாயனங்களுக்கு அதிகப்படியான தூண்டுதலைக் கொடுப்பதால் மனநிலையை, சந்தோஷமாகவும், அமைதியாகவும் வைத்திருக்கும். 

ஆற்றல் தொடர்ச்சியாக  : உடற்பயிற்சி செய்தால் தசைகளின் வலிமை கூடும், ஆற்றல் அதிகரிக்கும். மேலும் திசுக்களுக்கு தேவையான அளவு ஆக்சிஜன் கிடைக்க உதவி புரியும். 

தூக்கம்  : சீரான முறையில் உடற்பயிற்சி செய்தால், கடுமையான வேலைக்கு பின் தூக்கம் வருவது போல, தூக்கம் வரும். ஆனால் தூங்குவதற்கு முன் கண்டிப்பாக உடற்பயிற்சி செய்யக்கூடாது. 

எலும்புகளை ஆரோக்கியமாக வைக்கும்  : தினசரி உடற்பயிற்சி செய்தால், அது எலும்புகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக நிற்கும். இதனால் ஆஸ்டியோ போரோசிஸ் மற்றும் ஆர்த்ரிடிஸ் போன்ற நோய்கள் வராமல் தடுக்கலாம். 

புற்றுநோய்  : உடற்பயிற்சி குடல் புற்று நோய், மார்பக புற்றுநோய் மற்றும் நுரையீரல் புற்றுநோய் போன்ற பல வகையான புற்று நோய்கள் வருவதை குறைக்க உதவி புரிகிறது. அதனால் உடற்பயிற்சி செய்து, புற்று நோய் வரும் அபாயத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். 

நீண்ட ஆயுள்  : தினசரி உடற்பயிற்சி செய்வதால், ஆயுள் பல வருடம் கூடும். ஆயுளை கூட்டுவதோடு மட்டுமல்லாமல், வயதானாலும் ஆரோக்கியமான வாழ்வை வாழலாம். 

முதுகு வலியை குறைக்கும்  : முதுகு வலியால் அவஸ்தைப்படுபவர்கள், வலியை குறைக்க உடலை சிறிது வளைத்து உடற்பயிற்சி செய்யலாம். முதுகு வலியை, மருந்துகள் மூலம் குணப்படுத்துவதை விட, உடற்பயிற்சி மூலம் குறைப்பதே சிறந்த வழி. 

படிப்பாற்றல் அதிகரிக்கும்  : தினசரி உடற்பயிற்சி செய்தால் மூளையின் ரசாயன அளவு அதிகரிக்கும். இது புதிய மூளை அணுக்களை உருவாக்கி, மூளையில் உள்ள அணுக்களின் மத்தியில் இணைப்பை உருவாக்கும். அதனால் புதிய விஷயங்களை படிக்கவும், புரியவும் உதவும். டென்னிஸ், கூடைப்பந்து போன்ற கடின பயிற்சியையும் மேற்கொண்டால், படிப்புத் திறன் மற்றும் மன ஒருமித்தல் திறன் அதிகரிக்கும்.

No comments: