Wednesday, November 20, 2013

திருச்சி முக்கொம்பு


altதிருச்சி அருகில் இருக்கிற ஒரு சுற்றுலா தளம் தான் இது. காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறாக இங்கு பிரிந்து செல்வதால் முக்கொம்பு என்று பெயர்.காவிரி ஆற்றின் குறுக்கே மேலணை என்ற அணை கட்டப்பட்டு இருக்கிறது. நீர் நிலையுடன் கூடிய ஒரு பொழுது போக்கு இடம்.காசு செலவில்லாமல் பொழுது போக்க கூடிய இடம்.அதனால தான் என்னவோ அதிக காதலர்கள் (இவங்க மட்டுமா...) கூடும் இடமா இருக்கு போல.சிறுவர் முதல் பெரியவர் வரை விரும்பும் இடமாக இது இருக்கிறது.இரண்டு ஆறுகளுக்கு இடையில் பூங்கா
வேற இருக்கிறது. இந்த பூங்காவில் இளவட்ட கல் ஒன்று இருக்கின்றது என நினைக்கிறேன். சிறுவயதில் கண்டு இருக்கிறேன்.இப்போ எங்கேனு தெரியல.அணையின் மறுபக்கம் வாத்தலை என்ற ஊர் இருக்கிறது. ஓடும் ஆற்றின் அழகை அணையில் நடந்து செல்லும் போது ரசிக்கலாம்.

நிறைய மரங்கள் பசுமையுடன் ..அதுவும் நம்ம முன்னோர்களுடன்.நம்மள விட இவங்க தான் அதிகமா இருக்காங்க.அப்புறம் கட்டுசோறு கட்டி இங்க வந்து சாப்பிடற ஆளுகளை இம்சை பண்றதே இவங்களுக்கு வேலையா போச்சு..ஆனாலும் இதுவும் ஒரு அனுபவமே..

திருச்சியில் இருந்து கரூர் செல்லும் சாலையில் முக்கொம்பு இருக்கிறது இருபது கிலோமீட்டர் இருக்கும்.நல்ல அருமையான சுற்றுலா தளம்..

No comments: