Sunday, November 17, 2013

தழும்புகள் காணாமல் போக


altதழும்புகள் உடல் அழகைக் கெடுத்து விடுகிறது.விபத்து,அலர்ஜி மற்றும் தீகாயங்களினால் தழும்புகள்
ஏற்படுகின்றது.இவ்வாறு பல்வேறு காரணங்களால் ஏற்படும் தழும்புகள் இயற்கையான முறையில் நீக்கலாம்.

எலுமிச்சை சாறு:எலுமிச்சை சாற்றை தினமும் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில தடவி,2 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும்.முக்கியமாக எலுமிச்சை சாற்றை தீக்காயம் நன்கு காய்ந்த ப்பின்னர் தடவ வேண்டும்.
பாதம் எண்ணெய்:தீக்காயம் ஏற்பட்ட இடத்தில உள்ள தழும்புகளை நீக்க,பாதாம் அல்லது ஆலிவ் ஆயில் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.அதிலும் ஒரு நாளைக்கு இரு முறை தடவி,நன்கு பளிட்சென்று தெரியும் தழும்புகள் மங்கி விடும்.
கற்றாழை:கற்றாழையில் உள்ள ஜெல்லானது மிகவும் சிறந்த ஒரு பொருள்,அந்த ஜெல்லை தழும்புகள் உள்ள இடத்தில் தொடர்ந்து தடவினால் தழும்புகள் மறையும்,
பால் :தினமும் குளிக்கும் முன்பு ,பாலை தழும்புகள் உள்ள இடத்தில் தடவி மசாஜ் செய்து 10 நிமிடம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.வேண்டுமென்றால் எலுமிச்சை சாற்றை விட்டு செய்யலாம்.ஆலிவ் ஆயில் மற்றும் தக்காளி சாறுதழும்புகளை நீக்க பயன்படுகிறது.

No comments: