Saturday, November 16, 2013

வாழைத்தண்டு பொரியல்

வாழைத்தண்டுதேங்காய் துருவல்பச்சை மிளகாய்
தேவையான பொருள்கள்:
  1. வாழைத்தண்டு = ஓரடி நீளம்
  2. சின்ன வெங்காயம் = 50 கிராம்
  3. பச்சை மிளகாய் = 3
  4. தேங்காய் துருவல் = 4 ஸ்பூன்
  5. இஞ்சி = காலங்குலம்
  6. கடுகு = அரை ஸ்பூன்
  7. உளுத்தம் பருப்பு = 2 ஸ்பூன்
  8. கடலை பருப்பு = 1 ஸ்பூன்
  9. எண்ணெய் = 2 ஸ்பூன்
  10. உப்பு = தேவையான அளவு
செய்முறை:
  • வாழைத்தண்டு இளசாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அதை சமைப்பது வீண் வேலை. நார் அதிகம் உள்ள முற்றிய தண்டாக இருந்தால் அதை சமைத்து பயன் இல்லை.  ஆகையால்  வாழைத்தண்டு வாங்கும் போது அதிக கவனம் எடுத்து பிஞ்சாக வாங்க வேண்டும்.
  • இதை நல்ல முறையில் நார் நீக்கி ஆய்ந்து பொடியாக நறுக்கி சிறிது மோர் கலந்து நீரில் ஊற விட வேண்டும். அல்லது அரிசி கழுவிய கழுநீரில் சிறிது நேரம் வைத்திருந்தால் சமைகும் போது கருக்காது.
  • வெங்காயம், பச்சை மிளகாய் நறுக்கவும். இஞ்சியை தோல் நீக்கி தட்டிக் கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்த பின் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, தட்டிய இஞ்சி சேர்த்து கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் வதக்கவும்.
  • வாழைத்தண்டை சேர்த்து சிறிது வதக்கி உப்பு போட்டு மூடி 5 நிமிடம் வேக விடவும்.
சுவையான வாழைத்தண்டு பொரியல் தயார். இதை ரைஸ் குறிப்பாக வற்றல் குழம்பு, சப்பாத்தி போன்றவற்றோடு பரிமாறலாம்.
மருத்துவ குணங்கள்:
  • வாழைத்தண்டு குறைவான சர்க்கரை அளவு கொண்டது. சோடியம் குறைவாக மற்றும் வைட்டமின் A, பொட்டாசியம், மற்றும் நார்சத்துக்கள் அதிகமாக உள்ளது. அதிக ஊட்டச்சத்து மிக்கது. மலச்சிக்கலை குறைக்கும். சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்கள் குறையும்.

No comments: