Saturday, November 16, 2013

சுரைக்காய் கூட்டு

மஞ்சள் பொடிசுரைக்காய்மிளகாய் பொடி
தேவையான பொருள்கள்:
  1. சுரைக்காய் = அரை கிலோ
  2. துவரம் பருப்பு = 100 கிராம்
  3. பெருங்காயம் = சிறிது
  4. மஞ்சள் பொடி = சிறிதளவு
  5. மிளகாய் பொடி = 1 ஸ்பூன்
  6. தேங்காய் துருவல் = 4 ஸ்பூன்
  7. சீரகம் = அரை ஸ்பூன்
  8. கடுகு = அரை ஸ்பூன்
  9. உளுத்தம் பருப்பு = 1 ஸ்பூன்
  10. பச்சை மிளகாய் = 2
  11. எண்ணெய் = 2 ஸ்பூன்
  12. உப்பு = தேவையான அளவு
செய்முறை:
  • சுரைக்காய் தோல் சீவிக் கொள்ளவும். பொடியாக நறுக்கிக் கொள்ளவும். துவரம் பருப்பை பெருங்காயம், மஞ்சள் பொடி சேர்த்து குழைய வேக விடவும். பச்சை மிளகாயை நீளவாட்டில் கீறிக் கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். கடைசியாக பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அடுத்து சுரைக்காய் சேர்த்து வதக்கவும்.
  • சிறிது வதக்கியதும் சீரகம், மிளகாய் பொடி சேர்த்து வதக்கவும். மேலும் சிறிது வதங்கியதும் உப்பு சேர்த்து சிறிதளவு நீரை தெளித்து மூடி வைத்து வேக விடவும்.
  • 10 நிமிடம் கழித்து தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி கொத்தமல்லி சேர்த்து பரிமாறாவும்.
சுவையான சுரைக்காய் கூட்டு தயார். இதை ரைஸ், சப்பாத்தி, பரோட்டா போன்றவற்றோடு பரிமாறலாம்.

No comments: