Saturday, November 16, 2013

கேரட் குருமா

கேரட்கிராம்புஏலக்காய்
தேவையான பொருள்கள்:
  1. கேரட் = அரை கிலோ
  2. வற்றல் மிளகாய் = 6
  3. தனியா = 2 ஸ்பூன்
  4. தேங்காய் = 1 மூடி
  5. இஞ்சி = அரை அங்குலம்
  6. பூண்டு = 2 துண்டு
  7. பட்டை = 2 துண்டு
  8. ஏலக்காய் = 3
  9. கிராம்பு = 3
  10. பிரிஞ்சி இலை =1
  11. முந்திரி பருப்பு = 10
  12. சின்ன வெங்காயம் = 2
  13. தக்காளி = 2
  14. பச்சை மிளகாய் = 2
  15. எண்ணெய் = 2 ஸ்பூன்
  16. நெய் = 2 ஸ்பூன்
  17. உப்பு = தேவையான அளவு
செய்முறை:
  • கேரட்டை விரல் பருமனுக்கு ஓரங்குல துண்டுகளாக வெட்டவும். சின்ன வெங்காயம் நீள நீளமாக அரிந்து கொள்ளவும். பச்சை மிளகாயைக் கீறிக் கொள்ளவும். தக்காளி நறுக்கவும். தேங்காய் துருவிக் கொள்ளவும்.
  • சிறிது எண்ணெயில் வற்றல் மிளகாய், தனியாவை சிவக்க வறுக்கவும். அடுத்து தேங்காயையும், முந்திரி பருப்பையும் மணம் வரும் வரை வறுக்கவும். வறுத்ததை எல்லாம் மிக்ஸியில் போட்டு அரை கப் தண்ணீர் விட்டு நைஸாக அரைத்து எடுக்கவும். இஞ்சி, பூண்டு தோல் நீக்கி விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் மீதி எண்ணெய் விட்டு இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும். வதங்கியதும் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து மேலும் சிறிது வதக்கி கேரட்டை சேர்த்து அரைத்து வைத்திருக்கும் மசாலாவைச் சேர்த்து வதக்கவும்.
  • இவை நன்றாக வதங்கியதும் உப்பு போட்டு மூடி வைத்து வேக விடவும். சரியாக 5 நிமிடம் கழித்து திறந்து தேவையானால் சிறிது நீர் விட்டு திறந்து வைத்தே கிளறி விடவும்.
  • மசாலா வாசனை அடங்கி கேரட் வெந்ததும் நெய்யில் பிரிஞ்சி இலைகளை இரண்டாக கிள்ளி சேர்த்து பட்டை, தட்டிய ஏலக்காய், கிராம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொட்டவும். கொத்தமல்லி சேர்க்கவும்.
சுவையான கேரட் குருமா தயார். இதை ரைஸ், சப்பாத்தி, பூரி, பரோட்டா, பிரியாணி, நூடுல்ஸ், இட்லி, தோசை ஆகியவற்றொடு பரிமாறலாம்.
மருத்துவ குணங்கள்:
  • கேரட்டில் வைட்டமின்கள் A, B, C, D, E, G, K மற்றும் கால்சியம், தாமிரம், அயோடின், இரும்பு, மெக்னீசியம், மாங்கனீஸ், பொட்டாசியம், சோடியம் மற்றும் சல்பர் உள்ளது.
  • இதனால் குறிப்பாக கண்புரை மற்றும் இதர கண் பிரச்சினைகள் குறையும். உடலுக்கு சக்தியளிக்கிறது. இது இரத்த சோகை, இரத்த ஓட்ட பிரச்சினைகள் மற்றும் தோல் நோய்களை குறைக்கும். செரிமான பிரச்சினை மற்றும் புண்கள், ஆஸ்துமா போன்றவை குறையும்.

No comments: