Saturday, November 16, 2013

முருங்கைக்கீரை கூட்டு

முருங்கைக்கீரைமிளகாய் பொடிதுவரம் பருப்பு
  1. முருங்கைக்கீரை = அரை கிலோ
  2. துவரம் பருப்பு = 100 கிராம்
  3. மிளகாய் பொடி = அரை ஸ்பூன்
  4. வெங்காயம் = 2
  5. பெருங்காயம் = சிறிது
  6. மஞ்சள் பொடி = கால் ஸ்பூன்
  7. தக்காளி = 2
  8. தேங்காய் துருவல் = 4 ஸ்பூன்
  9. கடுகு = அரை ஸ்பூன்
  10. சீரகம் = அரை ஸ்பூன்
  11. உளுத்தம் பருப்பு = 1 ஸ்பூன்
  12. எண்ணெய் = 3 ஸ்பூன்
  13. உப்பு = தேவையான அளவு
செய்முறை:
  • முருங்கைக்கீரையை பழுப்பு நீக்கி ஆய்ந்து கொள்ளவும். துவரம் பருப்பை மஞ்சள் பொடி, பெருங்காயம் சேர்த்து குக்கரில் வைத்து வேக விடவும். கடைந்து கொள்ளவும். வெங்காயம், தக்காளி பொடியாக நறுக்கவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் வெங்காயம், தக்காளி வதக்கவும். வதங்கியதும் மிளகாய் பொடி, ஆய்ந்த கீரையை சேர்த்து வதக்கவும்.
  • சிறிது வதங்கியதும் அரை கப் நீர் விட்டு மூடி வைத்து 10 நிமிடம் வேக விடவும். வெந்ததும் கடைந்த பருப்பை சேர்த்து மேலும் சிறிது வதக்கி தேங்காய் துருவி சேர்க்கவும். இதை கிளறி இறக்கவும்.
  • பேனில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு தாளித்து சேர்க்கவும்.
சுவையான முருங்கைக்கீரை கூட்டு தயார்.  இதை ரைஸ் மற்றும் சப்பாத்தி, பரோட்டா போன்றவற்றோடு பரிமாறலாம்.
மருத்துவ குணங்கள்:
  • முருங்கையில் வைட்டமின்  A, வைட்டமின் C, கால்சியம்,  பொட்டாசியம், இரும்பு சத்து, புரதம், ஊட்டச்சத்து அதிகமாக உள்ளது. உயர் இரத்த அழுத்தம், தாது விருத்தி, வாதம் போன்றவவை குறையும்.
  • மேலும் முருங்கை தாய்ப்பாலை அதிகரிக்க உதவும். தலைவலி, ஜலதோஷம், இருமல், மூலம் ஆகியவை குறையும்.

No comments: