Sunday, January 27, 2013


கணினியைக் காக்க கட்டளைகள் பத்து...!


கணினியைக் காக்க...
பொதுவாக அனைவரின் கணினியில் வரும் ஆபத்தான பிரச்னை என்றாலே அது வைரஸ் தாக்கம்தான். வைரஸ் பரவிய அடுத்த நொடியிலிருந்தே கணினியை கபளீகரம் செய்யத் துவங்கிவிடுகிறது இந்த வைரஸ் நச்சு நிரல்கள். கணினியில் நாம் வைத்திருக்கும் முக்கிய கோப்புகள் முதல் entertainment -க்காக சேமித்து வைத்திருக்கும் கோப்புகள் வரை அனைத்தையும் பாகுபாடில்லாமல் முடக்கிவிடும். கணினியை அப்படியே ஸ்தம்பிக்கச் செய்து, செயலிழக்கவும் வைத்திடும் வல்லமை படைத்ததுதான் இந்த வைரஸ் என்ற நச்சு நிரல்...

சரி. இந்த வைரஸ் நீக்குவதற்கு தீர்வு என்ன? இவற்றை எப்படி அடியோடு கணினியை விட்டு விரட்டுவது?

முதலில் தடுப்பு முறைகளைப் பார்த்துவிடுவோம்.

1. முதலில் ஒரு சிறந்த Anti virus software -த் தேர்ந்தெடுத்து நிறுவிக்கொள்ளுங்கள். அது உங்கள் கணினிக்குப் பாதுகாப்பு கொடுக்கும். கட்டண மென்பொருளாக இருக்க வேண்டும் என்பது கட்டாயம்.

2. அடுத்தது உங்களுக்கு வரும் E-Mail கள் ஒவ்வொன்றையும் திறக்கும் முன்பு Scan செய்துவிட்டு திறந்து பார்க்கவும். பெரும்பாலான வைரஸ்கள் அல்லது வைரஸ் தொடர்புடைய (links) இணைய இணைப்புகள் இமெயில் மூலமே அனுப்பப்படுகிறது. எனவே மறக்காமல் உங்கள் இமெயில்களை திறந்து பார்க்கும் முன்பு அவற்றை முழுவதும் SCAN செய்து விட்டு திறந்து பார்ப்பது நல்லது.

3. விண்டோஸ் Firewall மட்டுமல்லாமல் COMODO, ZONEALARAM போன்ற சில சிறந்த Firewall மென்பொருள்களும் உள்ளன. அவற்றையும் பயன்படுத்துவது மேலும் உங்கள் கணினிக்கு சிறந்த பாதுகாப்பை அளிக்கும்.

4. உங்களுடைய கணினி தொடங்கும்போது (Start up) தானாகவே வைரஸ் எதிர்ப்பு மென்பொருளும் இயங்குமாறு அமைப்பது நல்லது. கூடவே Boot Scan -யும் செயல்படுத்துங்கள். இதனால் ஆரம்பநிலையிலேயே உங்கள் கணினி பாதுகாப்படுகிறது.

5. நிறுவிய ஆன்ட்டி வைரஸ் மென்பொருளை அப்டேட் செய்ய மறக்க வேண்டாம். இதனால் உங்கள் Antivirus மென்பொருள் மேலும் புதிய வைரஸ்களை தடுக்கும் திறன் கூடும். ஒவ்வொரு வைரஸ் மென்பொருள் நிறுவனமும் இத்தகைய அப்டேட்களை(online updates) இணையத்தின் மூலம் செய்யும் வசதியை அளிக்கிறது.

6. நீங்கள் browsing செய்யும்போது புதிய தளங்கள் அல்லது வேண்டாத சில தளங்களுக்கு அழைத்துச் செல்லும் பாப் அப் விண்டோக்களை நம்பாதீர்கள்..!! கவர்ச்சிகராமான படங்களையோ அல்லது மின்னனும் எழுத்துகளையோ காட்டி அது உங்களை அந்த வலைதளத்திற்கு அழைத்துச் செல்லும். பெரும்பாலான இத்தகைய பாப்அப் விண்டோக்கள் மிக ஆபத்தானது. உங்கள் கணினியை வைரஸ், மால்வேர் போன்ற தீய நிரல்கள்கொண்டு துவம்சம் செய்துவிடும் வல்லமை பெற்றவைதான் இத்தகைய பாப் அப் விளம்பரங்கள்(popup ads, popup windows), அதன் தொடர்புடைய இணையதளங்கள். எனவே இதில் அதிக கவனம் தேவை.

7. exe அல்லது .com போன்ற கோப்புகளை பிற தளங்களிலிருந்து பதிவிறக்கம்(download) செய்யும்போது அதிக கவனம் தேவை. நாம் டவுன்லோட் செய்யும் தளங்கள் பாதுகாப்பானது தானா என்பதை அறிந்து பிறகு தரவிறக்கம் மேற்கொள்வது நல்லது. இதனால் வேண்டாத கோப்புகள், வைரஸ்கள் நமது கணினியில் பதிவிறக்கம் செய்யப்படுவதை தவிர்க்க முடியும்.

8. அதுபோலவே இலவசம் என்ற மாய வார்த்தைக்கு மயங்கி நாம் பல வேண்டாத மென்பொருள்களை தரவிறக்கம் செய்து வைத்துக்கொள்கிறோம். இந்த இலவச மென்பொருள் நமக்கு நன்மை செய்கின்றன என்று நாம் நினைக்கிறோம். ஆனால் பெரும்பாலும் ஐம்பது சதவிகித நன்மையை மட்டுமே தரும். இதனால் இலவச தொல்லைகளும் பல உண்டு. .இவை அனைத்தும் மறைமுகத் தொல்லைகளே. இவற்றுடன் கூடவே இலவசமாக தேவையில்லாத கோப்புகளும்(unwanted files) தரவிறங்கி நம் கணினியின் இடத்தை பெரும்பாலும் ஆக்கிரமித்துக்கொள்ளும். இவற்றில் சில திருட்டு வைரஸ் நச்சு நிரல்களும் உண்டு.

9. நண்பர்கள் அல்லது கல்லூரி வகுப்பு தோழர்கள், சக அலுவலர்கள் இப்படி யாரிடமாவது CD களை பகிர்ந்துகொள்வதிலும் கவனம் செலுத்த வேண்டும். CD-க்களில் தொற்றியிருக்கும் வைரஸ் மென்பொருள்களை அவ்வளவு சுலபத்தில் கண்டறிய முடியாது. அவற்றை CD DRIVE-லிருந்து எடுக்காமலேயே கணினியை Shutdown செய்து மீண்டும் பயன்படுத்தும்போது START செய்தால் கணினி பூட் ஆகும்போது CDயிலிருக்கும் வைரசானது செயல்பட்டு நம் கணினியில் வந்து அமர்ந்துகொள்ளும். பிறகு அதனுடைய வேலையைக் காட்டத்துவங்கும். எனவே யாரிடமிருந்தும் சி.டி.க்களை பெறுவது அல்லது கொடுப்பதை குறைந்த அளவு குறைத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு தவிர்க்க முடியாத சூழ்நிலையில் பகிர்ந்துகொள்ளும்போது மறக்காமல் உங்களுடைய Antivirus Scanner மூலம் Scan செய்து ஏதேனும் வைரஸ் இருக்கிறதா என சோதித்து பிறகு பயன்படுத்தப் பழக வேண்டும். இதனால் கணினியான வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாக்கப்படும்.

10. cdயைப் போலவே USB என்று அழைக்கப்படுகிற Pen Driveவையும் முன்பு சொன்னதுபோலவே பயன்படுத்த வேண்டும். பென்டிரைவ் போன்றதொரு பயன்மிக்க மெமரி கார்டும் அப்படியே.. இவற்றை மற்ற இடங்களில் பயன்படுத்திவிட்டு மீண்டும் உங்கள் கணினியில் பயன்படுத்தும்போது நிச்சயம் மறக்காமல் virus Scan -க்கு உட்படுத்திவிட்டுதான் பயன்படுத்த வேண்டும். இந்த Removable Drive-களின் மூலமாக அதிகமாக, விரைவாக வைரஸ்கள் உங்கள் கணினிக்கு பரவுகின்றன என்பதை கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். எனவே பிறரிடமிருந்து இத்தகைய Removable Drive வாங்கிப் பயன்படுத்துவதை தவிர்த்துக்கொள்வது நலம்..

No comments: